கோட்டக்குப்பத்தில் தீண்டாமை சுவர்


கோட்டக்குப்பத்தில் தீண்டாமை சுவர்

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட மஸ்தான் குளம் பகுதியில்

25 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் மனைப்பட்டா, மின்சாரம், குடிநீர்வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை

மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த

பிரேமத்குரில் எம்.பி தலைமையில் மாநில பொது செயலாளர் விஜயன், விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி,

துணைத்தலைவர் கோவிந்தசாமி, பொது செயலாளர் கலியமூர்த்தி, விழுப்புரம் பாராளுமன்ற

தொகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் கலைமாறன்,

மாநில தலைவர் சோமசுந்தரம், திண்டிவனம் தொகுதி தலைவர் அண்ணாமலை ஆகியோர்

அடங்கிய குழுவினர் அப்பகுதியை பார்வையிட்டனர்.

பின்னர் பிரேமத்குரில் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகியும் இப்பகுதியை பார்க்கும் போது

வருத்தமாக உள்ளது. தமிழக அரசு இப்பகுதியில் சமத்துவம் உண்டா வதற்கான நடவடிக்கையை

எடுக்க வேண்டும்.இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதியை மறைக்கும் அளவுக்கு

நான்குபுறமும் மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உடனடியாக தாழ்த்தப்பட்ட மக்களை மறைத்து

நிற்கும் தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என எச்சரிக்கிறோம். இல்லையெனில் தமிழகம்

முழுவதும் இப்பிரச்னை கொண்டு செல்லப்படும். அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பான

இச்செயலை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. தமிழக அரசின் வீடு வழங்கும் திட்டத் தில்

இப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். இது குறித்து தமிழக

முதல்வருக்கு கடிதம் எழுதப்படும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மக்களை ஒன்று திரட்டி

தீண்டாமை சுவரை இடிக்க நடவடிக்கை எடுக்கும். தேர்தலுக்காக இதனை சொல்லவில்லை

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடுவோம். என்றார்.

Advertisements