பால் பற்களை பராமரிக்க…

பால் பற்களை பராமரிக்க…

 

 


குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் ஈறுகளின் மேல் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தைக்கு மூன்று வயது நெருங்கும்போது, சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆறு வயதில் இருந்து, பால் பற்களும் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பிக்கும். ஒவ்வொரு பால் பல்லுக்கும் கீழ் நிலைப் பற்கள் முளைத்து வருவதற்குத் தயாராக இருக்கும். ஆறு வயதுக்கு பிறகு நிலைப் பற்கள் சரியான அளவில் வளர்வதற்கேற்ற சூழலுக்கு இந்தப் பால் பற்கள் வழிவகுக்கின்றன. ‘ஆரோக்கியமான நிலைப் பற்களுக்கு அஸ்திவாரமே இந்தப் பால் பற்கள்தான். அதில் சொத்தை வந்தால், பல்லின் வேர் வரை ஊடுருவி, நிலைப் பற்களும் நிலைதடுமாறி ஆட்டம் கண்டுவிடும். அதிக அக்கறையோடு கவனித்தால்தான் நிலையான பற்கள் நீடித்திருக்கும்’ என்று இதமாய் எச்சரிக்கிறார் பல் மருத்துவர் சிந்தியா. மணிமணியான பால் பற்களைப் பராமரிக்க அவர் தரும் பளிச் டிப்ஸ்…

 

 தாய்ப் பால், புட்டிப்பால் அருந்தும் குழந்தைகளின் பற்களில், மிச்ச மீதி பால் ஒட்டிக்கொண்டு பற்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பால் குடித்து முடித்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் பருத்தித் துணியை நனைத்து பற்களைத் துடைத்துவிடுங்கள்.

 

சில குழந்தைகள் புட்டிப்பாலை வாயில் வைத்து உறிஞ்சியபடியே தூங்கிவிடும். இதனால் குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. பால் குடித்து முடித்ததும் புட்டியில் தண்ணீரை நிரப்பி உறிஞ்சச் செய்யுங்கள். பற்களில் படிந்துள்ள பால் வாய்க்குள் ஓடிவிடும்.

 

 கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ஃபிங்கர் பிரஷ்ஷினை உபயோகித்துக் குழந்தைகளுக்குப் பல் துலக்கிவிடுவது நல்லது. மேலும், குழந்தைகள் பற்பசையை விழுங்கும் ஆபத்து உள்ளதால், சிறிய பட்டாணி அளவுக்கு மட்டுமே பற்பசையைப் பயன்படுத்துவது நல்லது.

 

நல்ல முறையில், பல் துலக்குவதற்கு பட்டாணி அளவிலான பேஸ்ட் போதுமானது.

 

பிரஷ்ஷை சரியான கோணத்தில் பிடித்து, பற்கள், ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மென்மையாகப் பல் துலக்க செய்யவேண்டும். குழந்தைகள் இந்த டெக்னிக்கைக் கையாள்வது கடினம் என்பதால், ஐந்து வயது வரையிலும் பெற்றோரே பல் துலக்கிவிடுவது நல்லது.

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s